அறிவிப்புகள்
2012-2013ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணாக்கர்கள் .
2012-2013 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணாக்கர்கள் . முதல் மதிப்பெண் - 453/ 500 சூரியா.A இரண்டாம் மதிப்பெண் - 445/ 500 அருட்செல்வி .K மூன்றாம் மதிப்பெண்-439 / 500 அமிர்தராஜ் .K சிவா.A தங்களை கௌரவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். |
2012 ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் பள்ளி மாணாக்கர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்
2012 ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் பள்ளி மாணாக்கர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் . மற்றும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இணைய குழுவின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் , மேலும் மாணாக்கர்களுடைய மதிப்பெண்கள் பற்றிய தகவல் பெற :
|
2011-2012ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணாக்கர்கள் .
2010-2011 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணாக்கர்கள் .
முதல் மதிப்பெண் - 434/ 500 அனிதா .K இரண்டாம் மதிப்பெண் - 428 / 500 தேவேந்திரன் .R மூன்றாம் மதிப்பெண்-425 / 500 வினோதா .R தங்களை கௌரவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். |
மாணாக்கர்களுக்கு மரக்கன்று
ஆகஸ்ட் 15 ஆகஸ்ட் 15 அன்று மூத்தாக்குறிச்சியை சேர்ந்த திரு.கோவிந்தராஜ் காசிநாதன் , திரு.ரவீந்திரன் ராமசந்திரன் , திரு.செந்தில் சாம்பசிவம் , திரு.திருச்செல்வம் முத்து மற்றும் சிலம்பவேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த திரு.பாலசுப்ரமணியன் சின்னபிள்ளை அவர்கள் இணைந்து மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியுள்ளனர் .இணையகுழு சார்பாக அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் . |
பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
கல்வி மாவட்ட அளவிலான பூப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் அண்மையில் பாராட்டப்பட்டனர். ஒரத்தநாட்டில் அண்மையில் நடைபெற்ற பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான சீனியர் மகளிர் பூப்பந்து இறுதிப் போட்டியில் மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர். இதையொட்டி, வெற்றி பெற்ற மாணவிகள் வே. கவிநிலா, க. மோகனப்பிரியா, பெ. தர்மக்கனி, ம. சுமித்ரா, செ. ரத்னப்பிரியா, அ. அபிநயா, இரா. வினோதா, சு. அனிதா, பயிற்சியளித்த உடல் கல்வி ஆசிரியர் தி. பெஞ்சமின் கார்மென் ஆகியோரை மூத்தாக்குறிச்சி முன்னாள் ஊராட்சித் தலைவர் வி. சின்னக்கண்ணு, பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கருணாகரன், தலைமை ஆசிரியர் வே. மாரியப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். வெற்றி மாணவிகளுக்கு மூத்தாக்குறிச்சி இணைய குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் , தங்களை கௌரவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். -------- கடத்த செப்டம்பர் 23 அன்று தினமணி நாளிதழில் மற்றும் தினமணி இணையதளத்திலும் இந்த தகவல் வெளியானது . |
1-5 of 5